குடிநீருக்கான தட்டுப்பாடு! பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கும் மக்கள்
கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன்குளம், பாரதிபுரம், பொன்னகர் ஆகிய பகுதிகளில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருவதனால் தாங்கள் பெரும் நெருக்கடிகளை எதிர் கொள்வதாகப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம், மலையாளபுரம், பொன்னகர் ஆகிய பகுதிகளில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக இந்த பிரதேசங்களிலேயே காணப்பட்ட கிணறுகளில் நீர் வற்றிய நிலையில் காணப்படுவதனால் தற்போதைய வறட்சி காரணமாகக் குடிநீருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த பிரதேசத்தில் மக்கள் தமக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று கிளிநொச்சி அக்கராயன்குளம் பகுதிகளில் குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறிப்பாக கெங்காதரன் குடியிருப்பு இன் மாஸ்நகர் ஆனைவிழுந்தான் போன்ற பகுதிகளிலும் இவ்வாறு குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், இங்குள்ள தாங்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே தமக்கான குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுத்தருமாறு கோரியுள்ளனர்.


ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri