யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்(Photo)
பெட்ரோலை வழங்க கோரி யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பொது மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டோக்கன் பெற்றவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டமையால் இன்றைய தினம்(29) அதிகாலை தொடக்கம் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
இந்நிலையில் காலை 09 மணியளவில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்கே எரிபொருள் வழங்கப்படும் என அறிவித்தமையால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்றபட்டுள்ளது.
இதனையடுத்து வரிசையில் காத்திருந்த பலரும் மாவட்ட செயலகம் முன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
இதன்போது அங்கு வருகைதந்த பொலிஸாரிடம் “ஐ.ஓ.சி பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பொது மக்களுக்கான பெட்ரோல் வழங்கப்படும் என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தமையை அடுத்தே நாம் பெட்ரோலை பெற நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தோம்” என கூறி பத்திரிகை செய்திகளை பொலிஸாரிடம் காட்டியுள்ளார்கள்.
மாவட்ட செயலாளர்
இதேவேளை போராட்டக்காரர்களுடன் மேலதிக மாவட்ட செயலாளர் ம.பிரதீபன் பேச்சு
நடாத்திய போது, “அத்தியாவசிய சேவையாளர்களுக்கு எரிபொருள் விநியோகிக்குமாறு எமக்கு அறிவுறுத்தப்பட்டமைக்கு அமையவே தாம் எரிபொருள் நிரப்பு
நிலையத்தினருக்கு அவ்வாறு அறிவுறுத்தினோம்” என தெரிவித்துள்ளார்.

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
