இயற்கை அனர்த்தத்தினால் உயிர் நீத்த மக்களுக்கு கொட்டகலை- ரொசிட்ட மக்கள் அஞ்சலி
நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் உயிர் நீத்த மக்களுக்காக அஞ்சலி செய்யும் நிகழ்வு இன்று(4) கொட்டகலை ரொசிட்ட பகுதியில் இடம் பெற்றது.
இதில் முதலில் வழிப்பிள்ளையார் ஆலயத்தில் உயிர் நீத்த அனைவருக்கும் ஆத்மா சாந்தி வேண்டியும் இதில் பாதிக்கப்பட்டர்களுக்கு தமது இடர்களில் இருந்து நீங்க வேண்டியும் பிராத்தனை இடம்பெற்றதுடன் அதனை தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகின.
உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து விளக்கேற்றி மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பேரிடர்
குறித்த நிகழ்வில் உரையாற்றிய பலரும் எமது நாட்டில் இந்த பேரிடர் மூலம் மக்களுக்கு பாரிய பாடம் ஒன்றினை கற்றுக்கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, குறிப்பாக பணம் பட்டம் வீடு வாசல் காணி பூமி என அழையாது வாழும் காலப்பகுதியில் இன மத சாதி சமயம் மொழி போன்ற வேற்றுமைகளை கடந்த இந்த பூமியில் ஒற்றுமையாகவும் மகழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
எதிர்கால சமூகத்திற்கு மனித உயிர்கள் மிகவும் பெறுமதியானது என்ற எண்ணத்தினை ஏற்படுத்த வேண்டும் என்ற அதற்கான செயற்பாடுகளை இனி வரும் காலங்களிலாவது ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வினை வலியுறுத்தினர்.
இந் நிகழ்வில் மலையக மக்கள் சகதியின் தலைவர் இராமன் செந்தூரன் உரையாற்றுகையில், நீரில் குமிழ் போல நிலையற்ற இவ் உலக வாழ்க்கையினை உணர்ந்து எதிர்கால சமூகம் எமது பாரம் பரியமாக கடை பிடித்த வந்த மனி நேயத்தினை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் அமைய வேண்டும்.
அநுரவின் பாதுகாப்பு அதிகாரிக்கு நேர்ந்த கதி! மகிந்தவின் வன்னியாராச்சியின் முகம் சுழிக்க வைக்கும் செயல்..
அஞ்சலி
இழந்தவர்களுக்கு நாம் ஒன்றும் செய்யும் முடியாவிட்டாலும் கூட இழந்தது எம்முடன் வாழ்ந்த ஒரு உறவு என்பதனை நினைவில் கொள்வது காலத்தின் தேவை.

எனவே உயிரிழந்த அனைவருக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்வதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எம்மால் ஆறுதல் சொல்வது எப்படி என்று தெரியாது ஆனால் அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும்தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் சிறுவர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
ரொசிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்கள் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் பிரதேச வாசிகள் அரச அதிகாரிகள் கிராம சேவகர்கள்,வைத்தியர்கள்,விரியுரையாளர்கள் சமூக சேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அநுரவின் பாதுகாப்பு அதிகாரிக்கு நேர்ந்த கதி! மகிந்தவின் வன்னியாராச்சியின் முகம் சுழிக்க வைக்கும் செயல்..