எரிபொருட்களை பெற்றுக்கொள்ள அவதியுறும் யாழ்.மக்கள் (Photos)
நாட்டில் எரிபொருட்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு நிலவுகிறது. அந்தவகையில் யாழ். மாவட்ட மக்களும் எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்.
பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருட்கள் இல்லாத காரணத்தால் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் அங்கு எரிபொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரம் எரிபொருள் வழங்கப்படுவதால் அங்கு நெரிசலான நிலை ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

இந்த அசாதாரண சூழ்நிலையால் மாணவர்களைப் பாடசாலைக்கோ அல்லது தனியார் கல்வி நிலையங்களுக்கோ அழைத்துச் செல்ல முடியாத நிலையில் தாங்கள் உள்ளதாகப் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதுபோல முச்சக்கரவண்டிகளின் சாரதிகள், பேருந்து சேவையினர் போன்ற பல்வேறு
தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan