அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய காலம் மலர்ந்துள்ளது
அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய காலம் மலர்ந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு குரல் கொடுக்கத் தவறினால் தற்போதைய மக்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் நாடு என்று ஒன்று எஞ்சியிருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியில் இருப்பவர்கள் கடந்த காலம் முதலே ஏனையர்கள் மீது போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதியளவு சாட்சியங்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாக சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam