காலநிலை மாற்றங்களால் வாழ்வாதாரங்களை இழக்கும் மக்கள்
அனர்த்த காலப் பகுதிகளில் கடலுக்கு செல்லாத கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் பணிப்பாளர் ஜான்சன் பிரிறாடோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் வடக்கு கிழக்கு இளம் கடற்றொழிலாளர் கூட்டமைப்பின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் அண்மையில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டமையால் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்லாது பாதுகாப்பாக வீடுகளில் தங்கி இருந்தார்கள்.
உண்மையில் அவர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் வரவேற்கின்ற நிலையில், வடக்கு கிழக்கில் வாழுகின்ற பெரும்பாலான கடற்றொழிலாளர்கள் கரையோர மீன்பிடியை நம்பியே தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு புயல் எச்சரிக்கைகள் விடுக்கப்படும் நேரங்களில் அவர்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்ககையில்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |