கிளிநொச்சியில் 32 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நீர்ப்பாசன திட்டம் தொடர்பில் மக்கள் விசனம் (Photos)
கிளிநொச்சி - மாயவனுார்,புழுதியாறு குளத்தின் நீர்ப்பாசனத் திட்டம் 32 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு மேலாக செயலிழந்த நிலையில் காணப்படுகின்றமையினால் அப்பகுதி மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் தெரிவிக்கையில்,
புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனம் திட்டம்

“கடந்த 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மலையகத்தமிழ் மக்களே மாயவனூர் பகுதியில் அதிகம் வசித்து வருகின்றோம்.
அடிப்படை வாழ்வாதார வசதிகள் எதுவும் அற்ற நிலையில் தற்போதைய வரட்சி காரணமாக குறித்த பகுதியில் கிணறுகளில் கூடத் தண்ணீரில்லாத நிலை காணப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் கடந்த 2015ம் ஆண்டு வடக்கு மாகாண சபையால் 320 இலட்சம் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனம் முற்றுமுழுதாக செயலிழந்துள்ளது.
அடிப்படை வசதிகளற்ற நிலைமை

அதாவது 2014ம், 2015 ஆம் ஆண்டுகளில் மாகாணத்திற்கென குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து 320 இலட்சம் ரூபா செலவில் உணவு பயிர்ச்செய்கையை நோக்கமாக கொண்டு மாயவனூர் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனம் தற்போது எவ்வித பயன்பாடுமின்றி காணப்படுகின்றது.

இவ்வாறு பெருந்தொகையான நிதியைச் செலவிட்டும், குறித்த கிராமத்தில் வாழும் மக்களுக்கு எந்த நன்மைகளும் ஏற்படவில்லை.
மேலும் தற்போது குடிநீர் வசதியில்லை, வாழ்வாதார வசதியில்லை மற்றும் வறுமை காரணமாக நாங்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றோம் என்றும் விசனம் தெரிவித்துள்ளனர்.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam