தொழிற்சங்க போராட்டங்களினால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்: காமினி லொகுகே
தொழிற்சங்க போராட்டங்களினால் மக்கள் பாதிக்கப்படுவதாக சக்தி வளத்துறை அமைச்சர் காமினி லொகுகே (Gamini Lokuge) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் பெருந்தொற்று நிலைமை ஓரளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான போராட்டங்கள் மக்களை ஆபத்தில் தள்ளும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) தலைமையிலான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளினால் கோவிட் ஓரளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சில அரச சார்பற்ற நிறுவனங்களும், சில தொழிற்சங்கங்களும் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை சீர்குலைக்க முயற்சிக்கின்றன.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளில் அமுல்படுத்தப்பட முடியாது என தெரிந்தும் சில கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri