ஓய்வூதியம் இடைநிறுத்தப்படும்! இலங்கையில் ஓய்வூதியம் பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பு
இலங்கையில் ஓய்வூதியம் பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் ஆயுள் காப்புறுதி தரவு முறையை புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு புதுப்பிக்காத ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் இடைநிறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து மூலம் அறிவிப்பு

இந்த விடயத்தை ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டி. டயஸ் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
அத்துடன் ஓய்வூதியம் பெறுவோரின் வாழ்க்கைச் சான்றிதழை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பது குறித்து கிராம அதிகாரிகளுக்கு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தல் விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam