பருத்தித்துறை நகர சபை அமர்வு..! எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

Jaffna Northern Province of Sri Lanka
By Erimalai Apr 30, 2026 10:55 AM GMT
Report

பருத்தித்துறை நகர சபை அமர்வு, தவிசாளர் விந்சென்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இன்று(30) காலை 9.00 மணியளவில் ஆரம்பமானது.

முதலில் கடந்த கூட்டத்தின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு, அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சபைக்கு அறிவிக்கப்பட்டதுடன், அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மர்மமாக இருக்கும் ஈஸ்டர் குண்டுதாக்குதல்கள்! குற்றவாளிகளாக சிறைசென்று புலனாய்வாளர்களாக வெளியில் வந்த அதிசயம்

மர்மமாக இருக்கும் ஈஸ்டர் குண்டுதாக்குதல்கள்! குற்றவாளிகளாக சிறைசென்று புலனாய்வாளர்களாக வெளியில் வந்த அதிசயம்

 சட்ட நடவடிக்கை 

தொடர்ந்து சபை உறுப்பினர் சிவலிங்கம் பொன்னம்பலத்தால் முன்வைக்கப்பட்ட பல்வேறு முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டன.

நகர சபை எல்லைக்குட்பட்ட கழிவுநீர் வாய்க்கால்களில் கழிவுநீரை மட்டும் அகற்ற வேண்டும் என்றும், பிற கழிவுப்பொருட்களை வெளியேற்றுவோருக்கு தடை விதித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

பருத்தித்துறை நகர சபை அமர்வு..! எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் | Pedro City Council Session

மேலும் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் ஒதுக்கப்பட்ட விடயங்கள், மரக்கறி சந்தை துவிச்சக்கர வண்டி குத்தகை, நகரில் கேமரா கண்காணிப்பு அமைப்புக்கான கேமரா கொள்வனவு, திண்மக்கழிவகற்றல் சேவைக்கான பருத்தித்துறை பிரதேச சபையுடனான ஒப்பந்த புதுப்பிப்பு உள்ளிட்ட விடயங்களும் பரிசீலிக்கப்பட்டன.

அதேபோல், அவசர பராமரிப்பு பணிகளுக்கான பெறுகை நடைமுறைகளால் ஏற்படும் காலதாமதத்தை குறைக்கும் வகையில், தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களை நாட்கூலி அடிப்படையில் பயன்படுத்துவது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டது.

புடினுடன் நடைபெற்ற 90 நிமிட தொலைபேசி உரையாடல்! ட்ரம்ப் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை

புடினுடன் நடைபெற்ற 90 நிமிட தொலைபேசி உரையாடல்! ட்ரம்ப் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை

பருத்தித்துறை நகர சபை

“பிரஜாசக்தி” திட்டத்தின் கீழ் சமூக அபிவிருத்தி சபையால் முன்னுரிமைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி முன்மொழிவுகள், நகர சபை எல்லைக்குட்பட்ட வீட்டு திட்டங்களுக்கான கட்டிட அனுமதிகள், கோரியடி கடற்கரையில் நடமாடும் கடைகள் அமைப்பது உள்ளிட்ட விடயங்களும் அங்கீகரிக்கப்பட்டன.

மேலும் நவீன சந்தை தொகுதியில் வாடகை ஒப்பந்த பெயர் மாற்றம், பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 160 பயனாளிகளுக்கு இலவச நீர் இணைப்பு வழங்குதல், 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட முத்திரை தீர்வு நிதியில் இருந்து பொருட்கள் கொள்வனவு செய்வதற்கான அனுமதி ஆகியவையும் வழங்கப்பட்டன.

பருத்தித்துறை நகர சபை அமர்வு..! எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் | Pedro City Council Session

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பன்னங்கண்டி வீதி மற்றும் கண்ணை அம்மன் கோவில் வீதி அபிவிருத்தி பணிகளுக்கான ஒதுக்கீடு மற்றும் தழுவல் அனுமதியும் வழங்கப்பட்டது.

இதேவேளை, தேசிய கணக்கு ஆய்வு திணைக்களத்தின் அறிக்கையை தவிசாளர் சபைக்கு வாசித்தார். அதில், நிறுவனத்தில் பல மில்லியன் ரூபாய் அளவிலான நிதி கையாளல் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அனைத்து விவாதங்களும் நிறைவடைந்து, அமர்வு காலை 11.45 மணியளவில் நிறைவுற்றது.

இலங்கையில் முடிவிற்கு வரும் வங்கியொன்றின் நடவடிக்கைகள் - இன்றுடன் நிரந்தரமாக மூடப்படும் வங்கிக் கிளைகள்

இலங்கையில் முடிவிற்கு வரும் வங்கியொன்றின் நடவடிக்கைகள் - இன்றுடன் நிரந்தரமாக மூடப்படும் வங்கிக் கிளைகள்


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US