மன்னார் நகர சபையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் ஆவணம்
மன்னார் நகர சபையில் இடம்பெற்ற கடந்தகால ஊழல் நடவடிக்கைகளை சட்ட ரீதியான விசாரணைக்கு உற்படுத்துகின்ற போது ஊழல்வாதிகள் யார் என்பது தெரியவரும் என மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்துள்ளார்.
மன்னார் நகரசபை முதல்வர் டானியல் வசந்தன் பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி எனது நற்பெயருக்கு, அதே நேரம் அரச செயல்பாட்டுக்கும் களங்கம் கூறி மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடந்த செவ்வாய் மாலை மன்னார் நகர சபையின் முன்னாள் தலைவர் அன்ரனி டேவிட்சன் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் பொலிஸாரின் விசாரணைகளுக்கு அமைய இன்றையதினம் (10) மதியம் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்கு மூலத்தை பதிவு செய்த பின் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சபை கால கட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஏற்பட்ட ஊழல் நடவடிக்கைகளை அறிந்து கொண்டேன். குறிப்பாக கடந்த காலங்களில் பண்டிகைக்கால கடை வழங்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் ஊழல் இடம்பெற்றுள்ளமையை நான் அறிந்து கொண்டுள்ளேன்.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
எனினும், மன்னார் நகர சபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பான சகல ஆவணங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. குறித்த வழக்கு விசாரணைகள் இலங்கை இலஞ்ச ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். ஆணைக்குழு குறித்த வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த ஏற்கனவே கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதற்கு அமைவாக எனக்கு அழிக்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவாக குறித்த விடயம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். கடிதம் அனுப்பி உள்ளேன்.
மேலும் குறித்த மோசடிகள் தொடர்பில் உள்ளக விசாரணை இடம்பெற்று வருகின்றன. எனவே மன்னார் நகர சபையில் இடம்பெற்ற ஊழல்களுக்கு அமைவாக என்னிடம் ஆதாரம் உள்ளது.
எனவே, தாங்கள் குற்றமற்றவர்கள், ஊழல்கள் அற்றவர்கள் என தெரிவித்தால் குறித்த விடயம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடி தமது பிரச்சனைகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். நானும் நீதிமன்றத்தை நாட விரும்புகிறேன்.
நீதிமன்றத்தை நாடுகின்ற போது கடந்த காலத்தில் மன்னார் நகர சபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பான ஆவணத்தை சமர்ப்பிக்க முடியும்” என அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
