இலங்கையில் இருந்து 5 நாடுகளுக்கான பயணிகள் விமான சேவைகள் நிறுத்தம்
இலங்கையில் இருந்து 5 நாடுகளுக்கு விமானம் ஊடாக பயணிகளை அழைத்து செல்லும் நடவடிக்கை இன்று அதிகாலை முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, ஐக்கிய அரபு எமீரகத்தின் டுபாய் மற்றும் சார்ஜா பிராந்தியங்கள், சிங்கபூர், இத்தாலி, பிலிப்பைன்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு விமான பயணிகளை அழைத்து செல்லும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் அந்த நாடுகளில் இருந்து தொடர்ந்து இலங்கைக்கு விமான பயணிகள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விமான பயணிகளை அழைத்து செல்வது நிறுத்தப்பட்டுள்ள நாளில் தொடர்ந்து பொருட்களை ஏற்றி வரும் விமானங்கள் இலங்கையில் இருந்து வருவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam