மாகாணசபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது..! யாழில் தமிழ் கட்சிகள் கலந்துரையாடல்
எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக போட்டியிட்டு எவ்வாறு வடமாகணத்தை கைப்பற்றுவது, எவ்வாறு கட்சிகள் போட்டியிடுவது என்பது தொடர்பில் கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றுள்ளது.
தமிழ் கட்சிகளின் கூட்டம்
வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தலைமையில் இந்த தமிழ் கட்சிகளின் கூட்டம் மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முருகேசு சந்திரகுமார், வேந்தன் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
குறிப்பாக அடுத்த வருடமளவில் வடமாகாண சபை தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் கூறியுள்ள நிலையில் அது தொடர்பில் கட்சிகளின் நிலைப்பாடு எவ்வாறு காணப்படுகின்றது, இந்த தேர்தலில் வெற்றி பெறுவது என்பன தொடர்பில் முன்னாள் முதலமைச்சர் வரதராயப்பெருமாள் தலைமையில் இந்த கூட்டம் இரண்டு மணித்தியாலங்களாக இடம்பெற்றிருந்தது.
அழைப்பு
குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த போதும் M.A சுமந்திரன் சுகயீனம் காரணமாக வர முடியவில்லை என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
