பல்கலைக்கழங்கங்களில் அண்மைக்காலமாக பகிடிவதைககள்
பல்கலைக்கழங்கங்களில் அண்மைக்காலமாக பகிடிவதைககள் மற்றும் மாணவர்களின் ஒழுக்கமின்மை சம்பவங்கள் குறித்து துணைவேந்தர்கள் மற்றும் இயக்குநர்கள் குழு கவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள துணைவேந்தர்கள் மற்றும் இயக்குநர்கள் குழு,
இலங்கையின் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் அனைத்து விதமான பகிடிவதைகளையும் வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறியுள்ளது.
துணைவேந்தர்கள் எவரும் பகிடிவதைகளை மன்னிக்கவோ ஆதரிக்கவோ அல்லது குற்றவாளிகளைப் பாதுகாக்கவோ செயல்படவில்லை.
இந்தநிலையில் இது ஒரு சிக்கலான பிரச்சினையாகும் என்று குறிப்பிட்டுள்ள துணைவேந்தர்கள் குழு, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இருந்து பகிடிவதை அகற்றப்படுவதற்கு பல தலையீடுகள் தேவை என்று தாம் நம்புவதாகக் கூறியுள்ளது.
மோசமான விளைவுகள்
பல்கலைக்கழகங்களில் புதிதாக நுழைபவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிவில் சமூகத்தில் பகிடிவதைகளுக்கு எதிராக ஒரு வலுவான இயக்கம் இருக்க வேண்டும், அவர்களின் பெற்றோர்கள், அரசியல் நோக்கங்களால் தூண்டப்பட்ட மாணவர் குற்றவாளிகளின் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களுக்கு எதிராக நிற்க வேண்டும் என்றும் துணைவேந்தர்கள் மற்றும் இயக்குநர்கள் குழு கோரியுள்ளது.
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் 70 வருடங்களாக பகிடிவதைகள் நடைமுறையில் இருந்து
வருவதுடன், மோசமான விளைவுகளும் ஏற்படுகின்றன என்பதை குடியியல் சமூகம் புரிந்து
கொள்ளவேண்டும் என்றும் துணைவேந்தர்கள் குழு கேட்டுள்ளது.