பசில் ராஜபக்ச மீது கடுமையான குற்றச்சாட்டை சுமத்தும் விஜயதாச ராஜபக்ச!
இலங்கையில் செயற்படும் அரசியல் கட்சிகளில் எந்தவொரு கட்சிக்குள்ளும் உட்கட்சி ஜனநாயகம் இல்லையென்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், பசில் ராஜபக்ச காரணமாகவே இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
பசிலின் செயற்பாடு காரணமாகவே இன்று பலரின் வீடுகள் எரியூட்டப்பட்டன.
எனினும் அவர் தொடர்மாடிக்குள் பாதுகாப்பாக இருப்பதாக விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டார்.
20 ஆவது அரசியலைமைப்பின் மூலம் இரட்டை குடியுரிமையை கொண்ட பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்துக்குள் அனுமதித்தன் மூலம் இந்த பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளன.
எனினும் நாடு பிரச்சினைக்கு உள்ளாவது தொடர்பில் இரட்டை குடியுரிமை கொண்ட பசில் ராஜபக்சவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் விஜயதாச ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.