நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் நீதித்துறையைத் தாக்குவதை நிறுத்துங்கள்
நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்குள்மறைந்துகொண்டு நீதித்துறை மீது தாக்குதல் நடத்தும் செயலை உடனடியாக நிறுத்த வேண்டும் என இடதுசாரி மையத்தின் அழைப்பாளர் சமீர பெரேரா ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால், அதற்கு தற்போதைய அரசியலமைப்பு ரீதியான வழிமுறைகளையே பின்பற்ற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைகளை நாடுங்கள், அல்லது நாடாளுமன்றத்தில் இதனைத் தோற்கடிக்க முயற்சி செய்யுங்கள். அதை விடுத்து தேவையின்றி இடையூறு செய்யக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலத்தில் இந்நாட்டு மக்கள் பழைய அரசியல் வர்க்கத்தை நிராகரித்துள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைவாகவே செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சிக்கு மக்கள் மிகக் குறைந்த சதவீத ஆதரவையே வழங்கியுள்ளனர் என்பதை நினைவுகூர்ந்துள்ளார்.
மக்கள் தீர்ப்பை மதித்துச் செயற்படுமாறு எதிர்க்கட்சியினரைக் கேட்டுக்கொள்வதாக சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.