அரசாங்கத்துக்கு எதிராக ஜெனீவாவில் முறையிடப்போவதாக எதிர்க்கட்சி எச்சரிக்கை
ஐக்கிய மக்கள் சக்தியி்ன் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினிகுமாரி விஜேரட்னக்கு எதிராக தகாத வார்த்தைப் பிரயோகத்தை பயன்படுத்தியதாக கூறப்படும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டிராச்சிக்கு தண்டனை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை.
கடந்த வாரம் திஸ்ஸ குட்டியாராச்சி, இந்த தகாத வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டார் என்ற குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதனைடுத்து அது தொடர்பில் சபாநாயகர் தமது கவலையை வெளியிட்டதுடன், அவருக்கு எச்சரிக்கையை விடுத்திருந்தார்.
இந்தநிலையில் இன்று பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் சர்வதேச நாள் என்ற அடிப்படையில் குட்டியாராச்சிக்கு தண்டனை வழங்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹினிகுமாரி விஜேரத்ன மற்றும் எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லச்மன் கிரியெல்ல ஆகியோர் சபாநாகரிடம் கோரிக்கை விடுத்தனர்.
எனினும் அதற்கு உரிய பதிலை சபாநாயகர் வழங்கவில்லை.
இதன்போது கருத்துரைத்த லச்மன் கிரியெல்ல, இந்த விடயத்துக்கு நாடாளுமன்றத்துக்குள் தீர்வு இல்லையெனில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முறையீடு செய்யவேண்டியேற்படும் என்று எச்சரித்தார்.

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan
