நாடாளுமன்ற அமர்வு இன்று மீண்டும் ஆரம்பம்
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச (Ajith Rajapakse) தலைமையில் இன்று (23) ஆரம்பமாகியுள்ள நாடாளுமன்ற அமர்வானது 26 ஆம் திகதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, சிவில் நடைமுறை திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மற்றும் நீதித்துறை அமைப்பு சட்டத்தின் கீழான இரண்டு உத்தரவுகள் மீதான விவாதம் இன்று (23.07.2024) இடம்பெறவுள்ளது.
மேலும், சபை ஒத்தி வைக்கப்படும் வேளையில் எதிர்க்கட்சிகள் மேற்கொண்டுள்ள தீர்மானங்கள் குறித்து விவாதம் நடத்தப்படவுள்ளது.
சட்ட மூலங்கள்
அதேவேளை, 'தேசிய பாதுகாப்பு, அனைத்து மதங்கள் மற்றும் நாட்டின் கலாசாரம் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்' என்ற தலைப்பில் சபை ஒத்திவைப்பு விவாதம் நாளைய தினம் (24) இடம்பெறவுள்ளது.
அது மாத்திரமன்றி, பொது நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார மாற்றம் தொடர்பான சட்டமூலங்களின் இரண்டாம் வாசிப்பு குறித்து நாளை மறுதினம் (25) விவாதிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான விவாதத்திற்கு கூடுதல் அவகாசம் அளிக்கும் வகையில், அன்றைய தினம் வாய்மொழி பதில் தேவைப்படும் கேள்விகளை ஒத்திவைப்பு நேரத்தில் பரிசீலிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 21 மணி நேரம் முன்

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
