நாடாளுமன்ற தேர்தலுக்காக கிளிநொச்சியில் சுயேட்சை வேட்பாளர்கள் குழு
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள், இளைஞர்களுக்கும், புதிய முகங்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கிளிநொச்சியில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, இன்றைய தினம் (29.09.2024) நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், வன்னி தேர்தல் மாவட்ட இளைஞர்கள் பலர் இக்கலந்துரையாடலில், கலந்து கொண்டுள்ள நிலையில், சுயேட்சையாக இளைஞர்களை தேர்தலில் போட்டியிட வேண்டும் என குறித்த இளைஞர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
இருப்பினும், இந்த தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் முடிவு இல்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இளைஞர்களை ஒன்று திரட்டி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுக்க 7 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசியல் கட்சிகளுக்கு இளைஞர்களை உள்வாங்க அழுத்தம் கொடுப்பது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அக்குழுவின் செயலாளர் அந்தோனிமுத்து ஜெயாளன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், "இன்று பல்வேறு பகுதியிலும் இருந்து இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

அனைத்து கட்சிகளுக்கும் இளைஞர்களை உள்வாங்குவதற்கு அழுத்தம் கொடுப்பது எனவும், சுயேட்சையாக போட்டியிடும் இளைஞர்களுக்கு அவர்களின் பின்னணி அறிந்து ஆதரிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இக்குழுவை வழிநடத்த குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் வடக்கு மாகாணத்தில் இளைஞர்களை ஒன்று திரட்டி இளம் தலைவரை தெரிவு செய்ய வேண்டும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் பணம் கொடுத்து எங்களை களம் இறக்கியதாக கூறும் வகையில் சமூக வலைத்தளங்களில் சேறு பூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
உண்மையில் அவ்வாறு எமக்கு யாரும் பணம் தரவில்லை. நாங்கள் சுயாதீனமாகவே இயங்குகிறோம். அவ்வாறு சேறு பூசுபவர்கள் பணம் பெற்றிருந்தால் நிரூபிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







ரஜினியுடன் இரவு நேரத்தில் பைக்கில் சென்னையை சுற்றிய நடிகை.. நேரில் பார்த்த அனிருத்தின் தந்தை Cineulagam
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri