திடீரென ஏற்பட்ட எரிவாயு நெருக்கடி! எடுக்கப்பட்டுள்ள அவசர நடவடிக்கை
வீட்டு எரிவாயு விலை உயர்வினால் நுகர்வோருக்கு எந்தவிதமான பாதகமான விளைவுகளும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு இதனை தெரிவித்துள்ளது.
கடந்த 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
வீட்டு எரிவாயு விநியோகம்
இலங்கையில் வீட்டு எரிவாயுவை விநியோகிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தால் எரிவாயு உருளையின் விலையில் ஏற்படுத்தப்பட்ட உயர்வு குறித்து விசாரிப்பதற்காக, வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் இக்குழுவின் முன் வரவழைக்கப்பட்டனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர், வீட்டு எரிவாயு விலைகளை நிர்ணயிக்கும் அதிகாரம் அதிகார சபைக்கு இல்லை என்றும், இருப்பினும், எரிவாயு விலை உயர்வினால் நுகர்வோர் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துடன் கலந்தாலோசித்த பின்னர் விலையைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
எரிவாயு விநியோகத்தில் இடையூறு
தனியார் நிறுவனத்திற்கு சந்தைப் பங்கு குறைவாக இருப்பதால், எரிவாயுவை அதிக விலைக்கு வாங்க வேண்டியிருந்ததாகவும், அதன்படி, கொள்முதல் செலவுக்கு ஏற்ப எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட வேண்டியிருந்ததாகவும் அந்நிறுவனம் விளக்கியுள்ளதாக குழுவிடம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், எதிர்காலத்தில் வீட்டு உபயோக எரிவாயு விநியோகத்தில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், விலை உயர்வுகளால் நுகர்வோர் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியுள்ளது.
தனிநபர்களினால் வங்கி கணக்குகளில் குவிக்கப்படும் பணம்! அஸ்வெசும திட்டத்தில் கட்டாயப்படுத்தப்படும் நடைமுறை
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam