இன்று கூடும் நாடாளுமன்றம்
இலங்கையின் நாடாளுமன்றம், இன்று முதல் 23ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு தமது அமர்வுகளை நடத்தவுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
சட்டம் தொடர்பான விவாதம்
அதன்படி, மே 20ஆம் திகதி இன்று ஏனைய விடயங்களுடன் முக்கியமாக, கலால்(சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் தொடர்பான விவாதம் இடம்பெற்று வருகின்றது.
மே 21ஆம் திகதி புதன்கிழமை, ஏனைய விடயங்களுடன், நிதிச் சட்டங்கள் தொடர்பான இரண்டு விவாதங்கள் இடம்பெறவுள்ளன.
மே 22ஆம் திகதி வியாழக்கிழமை, ஏனைய விடயங்களுடன், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் உள்ள ஒழுங்குமுறைகள் தொடர்பான விவாதம் நடத்தப்படவுள்ளது.
மே 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை, குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை (திருத்த) யோசனையின் இரண்டாம் வாசிப்பு, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
