சபை அமர்வின் இடையே மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்(Video)
கடந்த வருடங்களை போன்றே இந்த வருடமும் தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை இந்த வரவு செலவு திட்டம் கொடுத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது உரையை ஆரம்பிக்கும் முன்னர், தமிழீழ விடுதலைப் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நாட்டினுடைய ஏற்றுமதித்துறை 10 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
நாடு முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்றால் ஏற்றுமதி வருவாய் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும் எனினும் அதற்கு மாறாக நாடு வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
அதேவேளை கடன் வாங்கும் அளவு குறைந்திருக்க வேண்டும் ஆனால் தற்பொழுது கடன் வாங்கும் எல்லை அதிகரித்துள்ளதுடன் வரி விதிப்பின் அதிகரிப்பினால் மக்களின் வாழ்கைச் சுமை அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
காரை நிறுத்தச்சொல்லி இறங்கி குதித்துவிட்டார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! கதறும் குடுபத்தினர் Cineulagam
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் விபரீத முடிவு: ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி News Lankasri