மக்களின் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கவனம் செலுத்தவேண்டும் - இரா.துரைரெட்னம்

Sri Lanka Parliament Shanakiyan Rasamanickam Sri Lanka Politician Sri Lanka Sri Lanka Budget 2023
By Kumar Nov 23, 2022 10:28 AM GMT
Report

அமைச்சர் சந்திரகாந்தனும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் நாடாளுமன்றத்தில் தங்களுக்குள் மோதிக்கொள்வதை விடுத்து மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கவனம் செலுத்தவேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா மன்றத்தின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.

நேற்று (22.11.2022) மட்டு.ஊடக மையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.

மக்களின் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கவனம் செலுத்தவேண்டும் - இரா.துரைரெட்னம் | Parliament Should Pay Attention To Peoples Issues

இச்சத்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாணசபை முறைமையினை நடைமுறைப்படுத்த தமிழ் தலைமைகள் விடாமுயற்சியை முன்னெடுக்கவேண்டும் என்று இதன்போது கோரிக்கையினை முன்வைத்தார்.

வாக்குவாதம்

இந்நிலையில் "மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பாக கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தில் அபிவிருத்தி குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோருக்கிடையே நாடாளுமன்றத்தில் நடைபெறும் வாக்குவாதங்கள் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வெட்கக் கேடான விடயங்கள் எனக் கூறினால் அது மிகையாகாது.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இவர்கள் இருவருக்கும் வாக்களித்து, மிகவும் அர்ப்பணிப்புடன் தங்களுக்கான வாக்கினை இவர்களுக்கு அளித்து, அவர்களைப் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார்கள். 

இதனை யாரும் மறுப்பதற்கில்லை. இது ஜனநாயகப் பண்பாகும். இவ்வாறான மக்கள் பிரதிநிதிகள் மாவட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக வரவு செலவுத் திட்டத்தில் ஆற்ற வேண்டிய உரை ஒரு பக்கமிருக்க, இரண்டு பேரும் பல விடயங்களை முன்வைத்து, மாவட்டத்துக்கு இழுக்கை ஏற்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

மக்களின் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கவனம் செலுத்தவேண்டும் - இரா.துரைரெட்னம் | Parliament Should Pay Attention To Peoples Issues

இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்றத்தில் மாவட்ட மக்களின் பிரச்சினைகளைப் பேசத் தெரியாதென்றால், விடயம் தெரிந்தவர்களிடம் கேட்டு, அறிய வேண்டும். அதை விட்டு விட்டு, இருவரும் தனியான விடயங்களுக்காவும், பொதுவான விடயங்களுக்காகவும் நாடாளுமன்றத்தில் சண்டை பிடிப்பதென்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயங்களல்ல.

குறிப்பிட்ட ஓரிரண்டு தினங்களாக இந்தப் நாடாளுமன்றத்தில் நடப்பதை மட்டக்களப்பு மாவட்ட மக்கள், இலங்கைவாழ் மக்கள் மட்டுமன்றி, உலகவாழ் தமிழ்பேசும் மக்கள் வெட்கித் தலைகுனிந்து கொண்டிருக்கிறார்கள். 

இவ்வாறான நிலையில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வினயமாக கேட்டுக் கொள்வது யாதென்றால், தற்போதைய வரவு செலவுத் திட்ட உரையில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது, என்னென்ன தேவைகளுக்காக ஒடுக்கப்பட்டது போன்ற விடயங்களே பேசப்பட வேண்டும். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பேசுவதற்காக சிறப்புரிமைகள் இருக்கின்றன. 

மக்கள் நலன்

ஆகவே எதிர்காலத்தில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, இவ்வாறான விவாதங்களைத் தவிர்த்து, மக்கள் நலன் சார்ந்த விடயங்களை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் சில அரசியல்வாதிகள் சில தவறுகளை விட்டது போன்று, நீங்கள் செயற்படாதீர்களென வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன். இந்நிலையில் மாவட்டத்தில் நடக்கின்ற விடயங்களை மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களில் பேசி, அதில் முடிவெடுக்காமல், ஓரக வஞ்சம் காட்டப்பட்டால் அதனைப் நாடாளுமன்றத்தில் பேச உறுப்பினர்களுக்கு உரிமையுண்டு.

மக்களின் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கவனம் செலுத்தவேண்டும் - இரா.துரைரெட்னம் | Parliament Should Pay Attention To Peoples Issues

இந்நிலையில் தற்போதைய காலகட்டத்தில் இலங்கை அரச தலைவர் ஜனாதிபதி நடைமுறையில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப் போவதாகக் கூறியிருக்கின்ற நிலையில் இலங்கை அரசாங்கம் கடந்த காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையை இல்லாமல் ஒழிப்பதற்கு பாரிய முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருக்கிறது.

மாகாணசபை முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் போது, சில உரிமையை எமது மக்கள் அனுபவிக்கலாம்.

 இந்நிலையில் தமிழ்த் தலைமைகள் மாகாணசபை முறைமையை இல்லாமல் செய்யத் துடியாய்த் துடிக்கின்ற இலங்கை அரசின் செயற்பாடுகளுக்குத் துணை போகாமல், தேர்தலை உடனடியாக நடாத்த அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US