ரணில் - சஜித் கூட்டணியின் சின்னத்தால் இழுபறி
ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான கூட்டணி
அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடிவடைவதற்குரிய சாத்தியம் காணப்படுகின்றது
என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.
நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்க வேண்டிய சின்னம் தொடர்பிலேயே இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கை சஜித் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இறுதி முடிவு
தேர்தலில் போட்டியிட போவதில்லை, தேசியப் பட்டியலிலும் வரப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்து விட்டதால், தலைமைப் பதவியில் மாற்றம் அவசியமில்லை என ஐ.தே.க. தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அடுத்தது நாடாளுமன்றத் தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் களமிறங்கும் யோசனையை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளது. அவ்வாறு செய்தால் அது தமது தரப்பு அரசியல் அடையாளத்துக்குப் பாதகம் என்பதால் பொது சின்னத்தில் களமிறங்கும் யோசனை ஐ.தே.க. தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை ஏற்பதற்கும் ஐ.தே.க. பச்சைக்கொடி காட்டியுள்ளது. எனவே, சின்னம் இறுதியானால் கூட்டணி பேச்சு வெற்றியளிக்கும் என ஐ.தே.க. உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றைய தினமும் பேச்சுவார்த்தை தொடர்ந்துள்ள நிலையில், எதிர்வரும் 29ஆம் திகதிக்குள் இறுதி முடிவொன்றை எட்டுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
