யாழ்.பலாலி மக்கள் 18 ஆவது நாளாகவும் தொடர் நிலமீட்பு போராட்டம்
இராணுவம் கையகப்படுத்திவைத்துள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி பலாலி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் நிலமீட்பு போராட்டம் இன்று(18.10.2026) 18 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டது.
பலாலி பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமது காணிகளை மீளவும் தங்களிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோரிக்கை
நீண்டகாலமாக தமது சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரத்தையும் பூர்வீக உரிமைகளையும் மீட்டெடுப்பதற்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பலாலி பகுதியை சேர்ந்த மக்கள் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் , இன்றைய தினம் 18ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் ஜெயிலர் 2! 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு? Manithan
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri