இலங்கையின் பாதையில் தமது நாடு செல்லும் என்ற கவலை தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பாகிஸ்தான்
தமது நாடு, இலங்கையின் பாதையில் செல்லப்போகிறது என்ற கவலை தற்போது தவிர்க்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்தமையால், அந்த சூழ்நிலையை தடுத்துள்ளதாக பாகிஸ்தானிய நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தற்போது பாகிஸ்தான் சரியான திசையில் செல்கிறதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கணிசமான கொள்கை மாற்றங்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் காரணமாகவே இலங்கையை போன்ற ஒரு நிலைமை தவிர்க்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடியின் விளிம்பிற்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான்
எரிசக்தி இறக்குமதியின் அதிக விலை காரணமாக பாகிஸ்தான் நெருக்கடியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டது. அதன் வெளிநாட்டு நாணய கையிருப்பு 9.8 பில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது.
இது ஐந்து வார இறக்குமதிகளுக்கு போதுமானதாக இல்லை. அத்துடன் இந்த ஆண்டு அமெரிக்க டொலருக்கு எதிராக பாக்கிஸ்தானிய ரூபாய் மிகக் குறைந்த அளவு வரை பலவீனமடைந்தது.
எனினும் சர்வதேச நாணய நிதியம் கடந்த மாதம் பாகிஸ்தானுடன் பணியாளர்கள் அளவிலான ஒப்பந்தத்தை எட்டியுள்ளதன் மூலம், கோரபட்ட 6 பில்லியன் டொலர் கடன் திட்டத்தில் 1.17 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள வழியேற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
| இலங்கையை போல் ஆக வேண்டாம்! வளரும் நாடுகளுக்கு பங்களாதேஷ் எச்சரிக்கை |
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri