அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்
பாகிஸ்தானின் ஷாஹீன்ஸ் உள்ளூர் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக கிரேட்டர் மென்செஸ்டர் பொலிஸார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலிக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக உறுதிபடுத்தியுள்ளனர்.
எனினும் சம்பவத்தின் தன்மை குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை
இதனையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அவரை தற்காலிகமாக, போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது.
அத்துடன், ஹைதர் அலிக்கு சட்டப்பூர்வ ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்து சட்ட நடவடிக்கைகளுக்கு மதிப்பளிப்பதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இந்த இடைநீக்கம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும், விசாரணையின் முடிவு வரை அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பார் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரித்துள்ளது.
சட்ட செயல்முறை முடிந்ததும் பாகி்ஸ்தான் கிரிக்கெட் சபை அதன் நடத்தை விதிகளின் கீழ் மேலும் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கும்.
அத்துடன், இந்த நேரத்தில் மேலும் எந்த கருத்தையும் தெரிவிக்கமுடியாது என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அறிவித்துள்ளது.





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 23 மணி நேரம் முன்

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan
