ஹோர்முஸை தடையின்றி கடக்கும் கப்பல்கள்.. அனுமதி வழங்கியது ஈரானிய அரசு
ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், பாகிஸ்தான், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் கப்பல்கள் குறைந்த எண்ணிக்கையில் பயணிக்கத் தொடங்கியுள்ளன.
மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஒட்டுமொத்த கடல்சார் போக்குவரத்து கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், இந்த நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தற்போது கிடைத்துள்ள முக்கியத் தகவல்கள் பின்வருமாறு,
பாகிஸ்தான், தனது நாட்டுக்கொடி ஏந்திய 20 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடக்க ஈரான் அனுமதி அளித்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
சர்வதேச கவனம்..
தினசரி இரண்டு கப்பல்கள் இந்த முக்கிய வழித்தடத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் (Ishaq Dar) சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியா, கடந்த வார இறுதியில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை (LPG) ஏற்றிச் சென்ற இரண்டு இந்தியக் கப்பல்கள் இந்த ஜலசந்தியைக் கடந்துள்ளன.
இந்தியக் கொடியுடன் கூடிய டேங்கர் கப்பல்கள் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்த ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட அண்மைய உடன்படிக்கையே இதற்குக் காரணமாகும்.
சீனா: மெரின் டிராஃபிக் (Marine Traffic) தரவுகளின்படி, திங்கள்கிழமை (30) இரண்டு பெரிய சீனக் கொள்கலன் கப்பல்கள் ஜலசந்தியைக் கடந்து மலேசியாவின் கிள்ளான் துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.