பஜாஜ் அசல் உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்தின் கோலாகல திறப்பு விழா யாழ். மண்ணில்
இலங்கையின் மிகப்பெரிய மற்றும் முக்கிய நிதி ரீதியான ஸ்திரமான கூட்டு நிறுவனங்களில் ஒன்றாக திகழும் டேவிட் பீரிஸ் குழுமம் நாட்டின் பொருளாதாரத்தையும், நாட்டு மக்களின் நலனையும் கருத்திற்கொண்டு ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருகின்றது.
நாடளாவிய ரீதியில் கிளைகளை அமைத்து அதன் சேவைகளை பல்வேறு பரிமாணங்களில் விஸ்தரித்து பல மைல்கற்களை கடந்துகொண்டிருக்கின்றது.
அந்த வகையில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் அதன் பிரத்தியேகமான சேவைகளை தற்போது வடமாகாணத்திலும் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
'வடமாகாண அபிவிருத்தி' எனும் கருப்பொருளைக்கொண்டு வடமாகாணத்தில் ஓர் அபிவிருத்தி முன்னேற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற டேவிட் பீரிஸ் குழுமத்தின் நீண்ட நாள் முயற்சிக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் கடந்த வருடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டன.
கடந்த காலங்களில் தொற்றுநோய், கட்டுமானப்பொருட்களுக்கான தட்டுப்பாடு போன்ற அசாதாரண சூழ்நிலைகள் நாட்டில் நிலவியபோதிலும் கட்டுமானப்பணிகள் இடைநிறுத்தப்படாது தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன.
முழுமையாக நிறைவடைந்த கட்டுமானப்பணிகளைத் தொடர்ந்து 2022 மார்ச் 16 ஆம் திகதி பஜாஜ் முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், QRVE - குவாட்ரி சைக்கிள் மற்றும் KVM மோட்டார் சைக்கிள்களிற்கான சேவை மற்றும் பழுதுபார்ப்புகளை மேற்கொள்ளும் வாகன வேலைத்தளம் மற்றும் பஜாஜ் அசல் உதிரி பாகங்கள் விற்பனை நிலையம் டேவிட் பீரிஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. டேவிட் பீரிஸ், திருமதி. பீரிஸ், திரு. ரோஹன திஸாநாயக்க, குழுமத்தின் தவிசாளர் மற்றும் நிர்வாக இயக்குநர் மற்றும் முழு குழுமத்தினதும் சிரேஷ்ட தலைமையியளாளர்கள் ஆகியோரின் முன்னிலையில் இல. 405, பிரவுண் வீதி, கொக்குவில் கிழக்கில் திறந்து வைக்கப்பட்டது.
இப்பிரம்மாண்ட திறப்பு விழாவில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி மற்றும் தலைமை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மேலும் பல அதிதிகள், முக்கியஸ்தர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.
வாகனலோகம், அசெட்லைன் லீசிங், டிபி லொஜிஸ்டிக்ஸ், டிபி க்ளோபல் வென்ச்சர்ஸ் மற்றும் டிபி இன்ஃபோடெக் போன்ற பல குழும நிறுவனங்கள் தங்களின் பல்வேறு வகையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை இதன்போது காட்சிப்படுத்தின.
இலை குழைகள் மற்றும் தோட்டஃ பண்ணை கழிவுகளை பொடியாக்கும் ஸ்ரெடார் இயந்திரம் இங்கு விற்பனைக்காக காட்சிபடுத்தப்பட்டிருந்தது.
இரசாயனப் பசளைகளுக்கு தட்டுப்பாடு நிகழும் இக் கால கட்டத்தில் இலகுவான முறையில் குறுகிய காலத்தில் இயற்கை உரம் தயாரிக்க உதவிடும் ஸ்ரெடார் இயந்திரம் விவசாயிகளுக்கும், வீட்டுத்தோட்டத்தில் ஈடுபடுவோருக்கும் கிடைத்த வரப்பிரசாதமாகும்.
டேவிட் பீரிஸ் குழுமமானது வடமாகாணத்தில் அதன் அனைத்து குழு செயற்பாடுகளையும் அறிமுகப்படுத்தி அவற்றை பிரதேசரீதியாகவும் விரிவுபடுத்தி வேலை வாய்ப்புகளையும் அதிகரித்து ஒட்டுமொத்த உள்ளுர் சமூகங்களின் வளர்ச்சியை கட்டியெழுப்ப உதவுகிறது என்பது யாவரும் அறிந்ததே.
இதற்கு சிறந்த உதாரணம் பஜாஜ் வாகனலோக வாகனவேலைத்தளம் மற்றும் பஜாஜ் அசல் உதிரி பாகங்கள் விற்பனை நிலையமுமாகும்.
பஜாஜ் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள், QRVE - குவாட்ரி சைக்கிள் அல்லது KVM மோட்டார் சைக்கிள்கிற்கான சேவைகள், வாகனங்களை கழுவுதல், சுத்தப்படுத்தல் மற்றும் இதர சேவைகள், சிறு பழுதுபார்ப்பு வேலைகள், வாகன பரிசோதனைகள் மற்றும் மிக உயர் தரத்தில் மேற்கொள்ளப்படும் சேவைகள் என அனைத்தையும் இப்போது வடமாகணத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
பஜாஜ் வாகனத்திற்கான இது போன்ற சேவைகள் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும்போது ஏற்படும் செலவுகளை சமாளிப்பதற்கான சிறப்பு நிதியுதவியை அசெட்லைன் லீசிங் வழங்குகிறது.
அத்தோடு பதிவுசெய்யப்பட்ட வாகனத்தை தேர்ந்தெடுக்க முடிவதோடு, குத்தகை மற்றும் காப்பீடு என்பவற்றையும் தற்போது ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய வாகனவேலைத்தளம் மற்றும் குழுமத்தின் அலுவலகங்களுக்குச் சென்று மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். அனைத்து வாடிக்கையாளர்களையும் அன்போடு வரவேற்கின்றோம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தமிழின அழிப்பும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் 24 நிமிடங்கள் முன்

பாக்கியா மாமனாரின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வந்த ராதிகா- தப்பிக்க வழி தேடும் கோபி, பரபரப்பான புரொமோ Cineulagam

4 நாளிலும் செம வசூல் வேட்டை நடத்திய சிவகார்த்திகேயனின் டான்- தமிழகத்தில் மட்டும் இவ்வளவா? Cineulagam

சனி வக்ர பெயர்ச்சியால் அடுத்த18 நாட்களில் இந்த 3 ராசிக்கும் வரப்போகும் போராபத்து....சனியால் அழிவு நிச்சயம்! Manithan

முன்னாள் மனைவி மீது பொய் வழக்கு போட்ட இமான்! குழந்தைகள் பாஸ்போர்ட் சர்ச்சை பற்றி அதிர்ச்சி தகவல் Cineulagam

KGF 2 படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ஷங்கர் போட்ட பதிவு- என்னமா சொல்லியிருக்கிறார் பாருங்க Cineulagam
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022