திடீரென்று வெடித்துச் சிதறிய ஹிஸ்புல்லாக்களின் பேஜர்கள்! இஸ்ரேலிய மொசாட் ஆடிய அதிரடி ஆட்டம்!!
பேஜர்களை 'Beepers' என்றும் அழைப்பார்கள்.
பேஜர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றபோது ‘பீப்’ என்று ஒரு சத்தம் வரும். அப்படியான சத்தம் வந்து ஐந்து வினாடிகளில் பேஜர்கள் வெடித்துச் சிதறும்படியாக, பேஜர்களுக்குள் வெடிமருந்துகள் மறைத்து வைத்திருந்தது இஸ்ரேலின் உளவுப் பிரிவான மொசாட்.
குறுஞ்செய்தி வந்துள்ளது என்கின்றதான ‘பீப்’ சதம் கேட்டதும் பேஜர்களில் வந்த குறுஞ்செய்தியைப் படிப்பதற்காக பேஜர்களை முகத்துக்கு அருகே கொண்டு செல்கின்றபோது வெடித்துச் சிதறும்படியாக அந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்தது.
படுகாயமடைந்த 2800 பேரில் பலருக்கு கண்கள் குரூடானதற்கும், பலருக்கு கைகள் துண்டிக்கப்பட்டதற்கும், பலருக்கு அடிவயிற்றில் கடுமையான காயம் ஏற்பட்டதற்கும் இதுதான் காரணம்.
காயமடைந்த பல ஹிஸ்புல்லா முக்கியஸ்தர்களை சிகிட்சைக்காக அவசர அவசரமாக ஈரானுக்கு கொண்டுசெல்லவேண்டிய அளவுக்கு ஹிஸ்புல்லாக்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தார்கள் இஸ்ரேலின் மொசார் அமைப்பினர்.
17ம் 18ம் திகதிகளில் லெபனானிலும், சிரியாவிலும் பேஜர்களும், தொலைத்தொடர்புச் சாதனங்களும் ஆயிரக்கணக்கில் திடீர்திடீரென்று வெடித்துச் சிதறிய சம்பவம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
புருஷனா இருக்குறது முக்கியம் இல்ல.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன் படத்தின் ப்ரோமோ Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri