சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்
நாட்டரிசி நெல் 1கிலோகிராம் 120 ரூபாவிற்கும் சம்பா நெல் 1 கிலோகிராம் 125 ரூபாவிற்கும் கீரிசம்பா நெல் 1 கிலோகிராம் 132 ரூபாவிற்கும் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.
இதற்காக கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 06 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நெல் அறுவடை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை குறிப்பிட்டுள்ளது.
முதற்கட்டமாக இந்த மாவட்டங்களுக்கான நெற்கொள்வனவை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கிளிநொச்சியிலுள்ள வடமாகாணத்திற்குரிய நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சிய சாலை துப்பரவு பணியில் உத்தியோகத்தர்கள் ஈடுபட்டனர்.



அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri
