பச்சிலைப்பள்ளி பிரதேசசபை தவிசாளர், உபதவிசாளர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
பச்சிலைப்பள்ளி பிரதேசசபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், உப தவிசாளர் முத்துக்குமாரகஜன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் ஆகியோரிடம் இன்று 18.02.2021பளை வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகன்டி வரையிலான எழுச்சி பேரணியில் கலந்து கொண்டமைக்காக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தவிசாளர் கூறுகையில், எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கமைவாக குறித்த போராட்டம் ஒழுங்குபடுத்தி நடத்தப்பட்டதால் நாங்கள் கலந்து கொண்டிருந்தோம்.
இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்படுகின்ற ஒன்று கூடுவதற்கான உரிமை இங்கு இருக்கின்ற அடிப்படையில் கலந்து கொண்டிருந்தோம்.
எமக்கு எந்தவிதமான நீதி மன்ற தடை உத்தரவும் கிடைக்கப்பெறாத பட்சத்தில் நாங்கள் கலந்து கொண்டிருந்தோம் எனவும் கூறியுள்ளார்.









