யாழில் இசை அமைத்து வெளிவந்துள்ள தமிழ் நாட்டுக்கு நிகரான இலங்கை படைப்புகள்
கட்டணம் செலுத்தப்பட்ட பதிவு
இலங்கையில் உள்ள தமிழ் இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் தமிழ் நாட்டுக்கு நிகரான சில பாடல்கள் 2022ல் வெளிவந்துள்ளன.
இலங்கைத் தமிழர்களின் இசைத்திறமைகளை வெளியே கொண்டுவரும் விதமாக இந்த பாடல்கள் அமைந்துள்ளன.
இங்கே P.U.Shankarரின் மெட்டிலும், வரிகளிலும், குரலிலும் ஐயனார் பாடல் வெளிவந்துள்ளது.
ஐயனார் பாடல்
இதற்கான பின்னணி இசையினை யாழ்பாணத்தில் Shanu அமைத்துள்ளார், அத்தோடு தாளம் Bhanuவின் வீணை, புல்லாங்குழல் இசை கலந்து இந்த பாடல் வெளிவந்துள்ளது.
இதில் இன்னுமொரு பாடல் தாயைப் பற்றியது ஆகும்.
தாய் பாடல்
இறைவனின் குழந்தைக்கு இறையூட்டும் அனைத்து தாய்மாருக்கும் இப்பாடல் சமர்ப்பணம் ஆகும்.
இப்பாடலின் இசை யாழ்ப்பாணத்தில் Jonahவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு மெட்டமைத்து வரிகள் போட்டு பாடியுள்ளார் P.U.Shankar.
சிறப்புடன் பிறந்த குழந்தைகளை சீராட்டி பாராட்டி வளர்க்கும் அத்தனை தாய்மாருக்கும் இப்பாடல் பொருந்தும்.
அத்துடன் Maestro Ragam என்னும் இன்னுமொரு பாடல் உள்ளது. இப்பாடலின் காட்சியமைப்பினை சுவிஸ் நாட்டில் எடுத்துள்ளார்கள்.
அதனை பாடல் வரிகளும் அழகாக எடுத்துக் காட்டுகின்றன.
Maestro Ragam பாடல்
இவர்களின் திறமைகளை நீங்களும் ஊக்கப்படுத்தினால் இலைமறை காயாக வாழும் திறமையாளர்கள் நாளை வெற்றிவாகை சூடுவார்கள் என கலைஞர்கள் கோருகின்றனர்.
புதிய படைப்புகளை இவர்களுடன் இணைந்து செய்ய விரும்புபவர்கள்
sp3tamil@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு இவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 22 மணி நேரம் முன்
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan