பரவிவரும் குரங்கு அம்மை நோய்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 780ஆக அதிகரிப்பு
உலகளவில் இதுவரை குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 780ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
இது ஒரு வாரத்திற்கு முன்பு பதிவான 257 தொற்றுகளை விட தோராயமாக மூன்று மடங்கு அதிகமானதாக பதிவாகியுள்ளது.

27 நாடுகளில் பரவியுள்ள குரங்கம்மை
தொற்று பொதுவாக லேசானது, ஆனால் மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவிற்கு வெளியே பரவலாக பரவுவது இதுவே முதல் முறையாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குரங்கு அம்மை நோய் 27 நாடுகளில் பரவியுள்ளது.
இந்த புதிய தொற்றுகளில் பெரும்பாலானவை ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலும், மெக்சிகோ, அர்ஜென்டினா, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு அமீரகங்களிலும் சிறிய எண்ணிக்கையில் உள்ளன.

பிரித்தானியாவில் 207 பேர், ஸ்பெயினில் 156 பேர் மற்றும் போர்த்துகலில் 138பேர் குரங்கு அம்மை நோயினால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan