ஜோ பைடனின் அதிரடி உத்தரவால் அமெரிக்காவிற்கு விரைந்த சீனாவின் முக்கிய அமைச்சர்
சீன உளவுத்துறையின் துணை அமைச்சராக இருந்த ஜிங்வெய், தனது மகளுடன் கடந்த பெப்ரவரி மாதம் சீனாவிலிருந்து தப்பி ஹாங்காங் மூலம் அமெரிக்காவிற்கு சென்றதாகவும், அவர் வுகான் ஆய்வகம் குறித்த அனைத்து ரகசியங்களையும் அமெரிக்காவிடம் அளித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோவிட் வைரசின் தோற்றம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்ற நிலையில்,முதலில் கோவிட் வைரஸ் வுகான் ஆய்வகத்தில் இருந்து வெளியேறிருக்க வாய்ப்பில்லை என கூறி வந்தாலும், தற்போது கோவிட் சீனாவின் வுகான் ஆய்வகத்திலிருந்து தான் பரவியிருக்க வேண்டும் என்ற கருத்து பலப்பட்டு வருகிறது.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கோவிட் தோற்றம் குறித்து 90 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அந்தநாட்டு உளவுத்துறைக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில்,சீனாவின் உளவுத்துறையின் துணை அமைச்சராக செயற்பட்டு வந்த ஜிங்வெய் அமெரிக்காவிற்கு தப்பிச்சென்று தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் இந்த உத்தரவின் பின்னணியில்,ஜிங்வெய் அளித்த தகவல்களின் அடிப்படையிலேயே, 90 நாட்களில் கோவிட் தோற்றம் குறித்து அறிக்கை அளிக்க ஜோ பைடன் உத்தரவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மார்ச் மாதம் நடைபெற்ற சீன-அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சர்கள் சந்திப்பில், ஜிங்வெய்யை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சீனா வலியுறுத்தியதாகவும், அதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.