நாமல் ராஜபக்சவுக்கு எதிரான கிரிஷ் வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு (Namal Rajapaksa ) எதிரான கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையொன்றை தாக்கல் செய்ய நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கின் நகர்வுப் பத்திரம் மீதான விசாரணை இன்று (12) கொழும்பு-கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச. கொழும்பு ட்ரான்ஸ்வர்க் சதுக்கத்தில் 4.3 ஏக்கர் நிலத்தை கிரிஷ் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்குப் பெற்றுக் கொடுப்பதற்காக 70 மில்லியன் நிதியை முறைகேடாகப் பெற்றுக் கொண்டதாக குற்றம் சாட்டி இந்த வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
அறிக்கை தாக்கல்
வழக்கின் இன்றைய விசாரணையின் தொடக்கத்தில், நாமல் ராஜபக்ச சார்பாக ஏ.ஏ.எல். முதித லொகுமுதலிகேவுடன் முன்னிலையான சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், அரசியல் பழிவாங்கல் காரணமாக வழக்கமான நீதித்துறை நடைமுறையை மீறி தனது கட்சிக்காரர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு பல்வேறு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை மார்ச் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் வழக்கின் விசாரணைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையொன்றை அன்றைய தினம் சமர்ப்பிக்குமாறு பொலிஸ் நிதி மோசடிப் பிரிவுக்கும் நீதவான் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

1988-ம் ஆண்டு 10 ரூபாய்க்கு வாங்கிய 30 ரிலையன்ஸ் பங்குகளை கண்டுபிடித்த நபர்.., தற்போது அதன் மதிப்பு எவ்வளவு? News Lankasri

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தின் ரிலீஸ்.. எப்போது தெரியுமா? Cineulagam
