சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த குடும்பஸ்தர்! நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 13 வயதுடைய சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த 43 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் றிஸ்வான் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
குறித்த சிறுமியின் தந்தை அவர்களை விட்டு பிரிந்து சென்றுள்ள நிலையில் தாயுடன் சிறுமி தனியே வசித்து வந்துள்ளார்.
அவரின் தாயார் வேலைக்கு சென்றிருந்த சமயம் சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பிறகு சிறுமியின் பெரிய தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் நேற்றைய தினம் நீதிபதியின் முன் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே குறித்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam