அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் கடும் முயற்சி
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக முயற்சித்து வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் எப்பொழுதும் நாட்டு மக்களுக்காகவோ அல்லது நாட்டுக்காகவோ ஒன்றிணைந்து செயல்பட்டதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் ஆட்சியை கவிழ்ப்பதற்கு முடியுமா அல்லது அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படுத்த முடியுமா என்ற விடயத்தில் மட்டும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த விடயம் பற்றி மக்கள் தற்பொழுது நன்கு அறிந்து வைத்துள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதை ஓர் சவாலாக கருதவில்லை என தெரிவித்துள்ளார்.
தித்வா புயல் சீற்றத்தின் போது அல்லது ஈரான் யுத்தத்தின் போது இந்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாட்டுக்காக செயல்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இதனை எதிர்க்கட்சிகள் நன்றாக அறிந்து வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னர் ஒருபோதும் நினைத்துப் பார்க்காத நபர்கள் தற்பொழுது கைதாகி வருவதாகவும் முன்னர் ஒருபோதும் வெளிவராத சாட்சியங்கள் தற்பொழுது வெளிவந்து கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நிச்சயமாக அரசாங்கத்திற்கு எதிராக அந்த கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதனைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam