அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேசத்திடம் முறைப்பாடு செய்யும் எதிர்க்கட்சிகள்
இலங்கையின் எதிர்க்கட்சிகள் சர்வதேச அமைப்புக்களிடம் அரசாங்கம் தொடர்பில் அதிகாரபூர்வ முறைப்பா செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் சட்டத்தரணிகள், ஊடக உரிமையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகளைக் கண்டித்து, நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து சர்வதேச அமைப்புகளுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்தக் கடிதத்தில் இலங்கையின் அரசியல் களத்தில் உள்ள முக்கியத் தலைவர்கள் பலரும் கையொப்பமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் (ஐக்கிய மக்கள் சக்தி) சஜித் பிரேமதாச, சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச ஆகியோர் இந்த கடிதத்தில் கையொப்பிட்டுள்னர்.
இலங்கையின் பொலிஸ் மா அதிபர் மற்றும் ஒட்டுமொத்த பொலிஸ் கட்டமைப்பு தீவிர அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதாகக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் 60 உயிர்கள் பறிபோயுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே மேலும் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 14-ம் திகதி அதிஉயர் பாதுகாப்பு வலையத்திற்கு அருகே சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நீதித்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த கொலையை நியாயப்படுத்தும் வகையில், கொல்லப்பட்ட சட்டத்தரணிக்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார், ஒரு மணி நேரத்திற்குள் அவதூறு பரப்பியதாகக் கடிதத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மூலம் மக்களின் எதிர்ப்புக் குரல்களை ஒடுக்க அரசாங்கம் முயல்வதாகவும், இது சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையை (ICCPR) மீறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் (IBA), பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம், சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International), மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளுக்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam