மகிந்தவின் கட்சியின் பொதுச் செயலாளரை தாக்க முயற்சித்த ராஜாங்க அமைச்சர்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசத்திற்கு கட்சிக்குள் எதிர்ப்புகள் வலுத்து வருவதாக தெரியவருகிறது. இரண்டு சந்தர்ப்பங்களில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சாகர காரியவசத்தை தாக்க முயற்சித்துள்ளனர்.
காரியவசத்தை தாக்க முயற்சித்த பிரசன்ன ரணவீர

22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் தொடர்பாக நடந்த ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, சாகர காரியவசத்தை தாக்க முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து பிரதமர் தினேஷ் குணவர்தன தலையிட்டு, அவர்களை சமாதானப்படுத்தியுள்ளார்.
தூக்கி நிலத்தில் அடிப்பேன்

22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் தினத்திற்கு முதல் நாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே, சாகர காரியவசத்தை மோசமாக திட்டியுள்ளதுடன் கட்சியின் செயலாளர் என பாராது தூக்கி நிலத்தில் அடிப்பேன் எனக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.