எரிபொருள் நிரப்பு நிலையங்களை விற்பனை செய்வதற்கு கடும் எதிர்ப்பு
சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களை விற்பனை செய்வது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள்
தற்போதைய அரசாங்கம் எரிபொருள், எரிவாயு என்பவற்றை உரிய முறையில் பொதுமக்களுக்கு வழங்குவதிலோ, பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலோ தோல்வியை தழுவியுள்ளது.
இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் பொது சொத்துக்களை விற்பனை செய்து வருமானம் உழைப்பதில் தான் குறியாக இருக்கின்றது.
இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களும் அவ்வாறான நோக்கத்திலேயே விற்பனை செய்யப்படவுள்ளது.
எதிர்ப்பு
அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக எதிர்க்கின்றது.
எரிபொருள், எரிவாயு என்பவற்றை வழங்குவது அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்புகளில் ஒன்றாகும் என்று திஸ்ஸ அத்தநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.