செவிமடுக்காத மகிந்த! அலி சப்ரிக்கு நன்றி தெரிவித்த எதிர்க்கட்சி
இழைக்கப்பட்ட தவறுகளை பணிவுடன் ஏற்றுக்கொண்ட அமைச்சர் அலி சப்ரிக்கு நன்றி கூறுவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் முன்னதாகவே சென்றிருக்க வேண்டும் என்றும், இது ஒரு வரலாற்றுத் தவறு என்றும் அமைச்சர் அலி சப்ரி இன்றையதினம் நாடாளுமன்றத்தில் கூறினார். வரி குறைப்பும் பாரிய தவறு என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளின் பதில் உரையின் போது அமைச்சர் அலி சப்ரி கூறியதையே தானும் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அப்போதைய நிதி அமைச்சரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ஷ தனது பேச்சை எந்த வகையிலும் செவிமடுக்கவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், இழைக்கப்பட்ட தவறுகளை பணிவுடன் ஏற்றுக்கொண்ட அமைச்சர் அலி சப்ரிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நன்றி தெரிவித்தார்.
எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam