எரிவாயு வெடிப்பை வைத்து எதிர்க்கட்சி அரசியல் இலாபம் அடைய நினைக்கிறது: இராஜாங்க அமைச்சர் (Photos)
நாட்டில் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவத்தை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் அடைய நினைப்பதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் (S.Viyalendiran) குற்றம் சுமத்தியுள்ளார்.
திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கு நேற்று விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த போதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கையினை முன்னெடுக்க தயாராகி வருகிறது. ஏனென்றால் மக்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்துகின்ற எந்தவொரு விடயத்தினையும் அரசாங்கம் அனுமதிக்காது.
எதிர்க்கட்சியினர் இவ்வாறான சம்பவங்களை அரசியல் மயப்படுத்த வேண்டாம். தமிழ் மொழி பாடசாலைகளில் மாணவர்கள் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
வாரத்தில் ஒருநாள் தமிழ் பண்பாட்டு அம்சங்களை பிரதிபலிக்கும் செயற்பாடு, உடை முதல் ஏனைய செயற்றப்படுகளை முன்னெடுக்குமாறும் கிழக்கு மாகாண கல்வி திணைக்கள பணிப்பாளர் பிள்ளைநாயகமிடம் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் பல பாடசாலைகளை தரமுயர்த்தவும்
முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - வீழ்த்தப்பட்ட 8 அமெரிக்க தளங்கள்
ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம்
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri