ஐரோப்பிய நாடு ஒன்று இலங்கையர்களுக்கு வழங்கியுள்ள அறிய வாய்ப்பு: செய்திகளின் தொகுப்பு
இலங்கையர்களுக்கு ருமேனியாவில் தொழில் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கான ஒரு வருட காலத்தை நீடிக்க ருமேனிய அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
ருமேனியாவுக்கு தொழில் வாய்ப்புக்காகச் செல்லும் இலங்கையர்கள் குழுவொன்றுக்கு விமான சீட்டுகளை வழங்கும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
பணியாளர்களின் நடத்தை மற்றும் திறனைப் பொறுத்து ஒரு வருட ஒப்பந்தத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க ஏற்கனவே வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறினார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,