பாகிஸ்தானுக்கு இந்தியாவின் பதிலடி! நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அதிரடி பதிவு
பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் இராணுவ நடவடிக்கை மூலம் தாக்குதல் இந்தியா நடத்தியுள்ளது.
'ஆபரேஷன் சிந்தூர்’
இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது அதிரடியான கருத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “போராளியின் சண்டை தொடங்கியது. பணி நிறைவேறும் வரை இனி ஓய்வில்லை. ஒட்டுமொத்த தேசமும் உங்களுடன் உள்ளது. ஜெய்ஹிந்த்” என குறிப்பிட்டுள்ளார்.
இதில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சகத்தை அவர் டேக் செய்துள்ளார்.
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ இராணுவ நடவடிக்கையை அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பலர் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத தாக்குதல்
கடந்த ஏப்ரல் 22-ம் திகதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
இதன்காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஆரம்பமானது.
அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது.
பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.





போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri
