அமெரிக்காவுடன் வரி குறித்து பேச்சுவார்த்தை நடத்திய ஒரே நாடு இலங்கை
அமெரிக்காவுடன் வரி குறித்து இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்திய உலகின் ஒரே நாடு இலங்கை என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசாங்கம் அண்மையில் பல நாடுகள் மீது சுங்க வரிகளை விதித்திருந்தது. இந்த வரி தொடர்பில் இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்திய ஒரே நாடு இலங்கை என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கங்கள்
இந்த பிரச்சனை ஏற்பட்ட போது அரசாங்கம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை சுமத்தியதாகவும் பெரிய பிரச்சனை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
கடந்த அரசாங்கங்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த போதிலும் அந்த அரசாங்கங்களில் ஆட்சி அதிகாரத்திலிருந்தவர்கள் தற்பொழுது அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதில் கூடுதல் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
சுங்கவரி தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா




