துப்பாக்கி உரிமம் தொடர்பாக அரசாங்கத்தின் முடிவு
தனிப்பட்ட பாதுகாப்புக்காக ஒரு குடிமகனுக்கு ஒரு துப்பாக்கியை மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், உளவுத்துறை அறிக்கைகளை பரிசீலித்த பின்னரே அது வழங்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தனிப்பட்ட பாதுகாப்புக்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளையும் 2024 நவம்பர் 21இற்குள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
சட்ட நடவடிக்கை
இந்த அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, உரிமதாரர்களில் சுமார் 85 வீதமானோர் தங்கள் துப்பாக்கிகளைத் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதேவேளை, கடந்த காலங்களில் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு கணிசமான அளவு துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் வழங்கப்பட்டிருப்பது கவனிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை 2024 டிசம்பர் 31இற்கு முன்னர் அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், துப்பாக்கிகளை ஆய்வுக்காக திருப்பி அனுப்பத் தவறும் உரிமம் பெற்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |