25 மாவட்டங்களிலும் ஓட்டுநர் உரிமங்களை ஒன்லைனில் வழங்க நடவடிக்கை
எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 25 மாவட்டங்களிலும் ஓட்டுநர் உரிமங்களை ஒன்லைனில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த சேவை தற்போது 11 மாவட்டங்களில் ஒன்லைனில் செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள மாவட்டங்களில் ஓட்டுநர் உரிமங்களை ஒன்லைனில் வழங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும் ஓட்டுநர் உரிமங்களை ஒன்லைனில் வழங்குவதன் மூலம், ஒரு மாதத்திற்குள் ஓட்டுநர் உரிமங்களைப் பெற முடியும் என அவர் கூறியுள்ளார்.
ஓட்டுநர் உரிமை
கடந்த ஆண்டு, ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதற்காக ஒரு தனியார் நிறுவனத்திற்கு 184 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டது.

இந்தாண்டு 28 மில்லியன் ரூபாய் செலவில் புதிய நிறுவனம் மூலம் சேவையைப் பெறவும், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூலம் அச்சிடும் இயந்திரங்களை வாங்கவும், தனது சொந்த திணைக்களம் மூலம் ஓட்டுநர் உரிமங்களை அச்சிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam