இணையத்தில் ஆடைகள் விற்பனை தொடர்பில் பாரிய மோசடி அம்பலம்
இணையத்தில் ஆடைகள் விற்பனை செய்வதாக கூறி 10 மில்லியன் ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பிரிவு சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் ஹபரணையை சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை, பின்வத்த, மீகஹகோவில வீதியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
வங்கி பதிவுகள்
மேலும் சந்தேக நபரின் வங்கி கணக்கில் ஒரு மில்லியன் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக வங்கி பதிவுகள் தெரிவிக்கின்றன.

டெலிகிராம் செயலி மூலம் மதிப்புமிக்க ஆடைகள் இணையத்தில் விற்கப்படுவதாகவும், இணைப்பை கிளிக் செய்ததால் பல லட்சம் ரூபாய் பரிசை வென்றுள்ளதாகவும் குறுந்தகவல் அனுப்பப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்கள் கைது
அதற்கமைய, அதனை பெற ஒரு தொகை பணத்தை வைப்பு செய்துள்ளார். மேலும் பல சந்தர்ப்பங்களில், அவ்வப்போது அவரை தவறாக வழிநடத்தி, தொடர்புடைய இலக்கு தொகையை பெற 10 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். மேலும் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.