குடும்பஸ்தர் வெட்டிக்கொலை! - சந்தேகநபர் கத்தியுடன் மடக்கிப்பிடிப்பு
குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் புத்தளம் மாவட்டம், முந்தல் - கரிகட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று முந்தல் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
எஸ்.எம்.சாமர என்ற (வயது 48) என்ற நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கத்தியுடன் தப்பிச் சென்றுள்ள நிலையில், பொலிஸார் மற்றும் இளைஞர்கள் சிலர் இணைந்து குறித்த நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
கொலைக்குப் பயன்படுத்திய கத்தியும் அவரிடமிருந்து
மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முந்தல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam